search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜடேஜா, பிராவோ இல்லாதது பாதிப்பு: ரெய்னா கருத்து
    X

    ஜடேஜா, பிராவோ இல்லாதது பாதிப்பு: ரெய்னா கருத்து

    ஜடேஜா, பிராவோ போன்ற அனுபவம் வாய்ந்தவ வீரர்கள் இல்லாதது அணிக்கு பின்னடைவு என குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
    ராஜ்கோட்:

    காம்பீர், கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. கேப்டன் ரெய்னா 51 பந்தில் 68 ரன்னும் (7 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 25 பந்தில் 47 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், போல்ட், பியூஸ்சாவ்லா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய கொல்கத்தா காம்பீர்-கிறிஸ் லின்னின் அதிரடியால் எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணி 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 184 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் லின் 41 பந்தில் 93 ரன்னும் (6 பவுண்டரி, 8 சிக்சர்), காம்பீர் 48 பந்தில் 76 ரன்னும் (12 பவுண்டரி), எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் கூறியதாவது:-


    எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். சில கேட்சுகளை நழுவவிட்டோம். இதனால் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும்.

    கிறிஸ்லின்னின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவரது அதிரடியான ஆட்டத்தால் எனக்குத்தான் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-


    180 ரன் என்பதே நல்ல ஸ்கோர்தான் முதல் 6 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு மோசமாக இருந்தது. பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. ஜடேஜா, பிராவோ போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாதது அணிக்கு பாதிப்பே. 20 ஓவர் போட்டியில் ஜடேஜா மிகவும் சிறப்பா செயல்படக் கூடியவர். மிடில் வரிசையில் பிராவோ நன்றாக செயல் படக் கூடியவர். பேட்டிங்கில் இன்னும் அதிகமான திறமை தேவை.

    இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த ஆடத்தில் 2 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சை நாளை சந்திக்கிறது.

    குஜராத் லயன்ஸ் அணி 2-வது போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசஸ் ஐதராபாத்தை நாளை எதிர் கொள்கிறது.
    Next Story
    ×