TN Election 2026: கள்ளக்குறிச்சியில் மக்கள் ஆதரவு யாருக்கு? Vox Pop

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது.
TN Election 2026: கள்ளக்குறிச்சியில் மக்கள் ஆதரவு யாருக்கு? Vox Pop
Published on

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடை பெறுகிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி கள்ளக்குறிச்சி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய vox pops நடத்தினோம்.

35 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று 26 பேர் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பதாக 8 பேரும், த.வெ.க.விற்கு வாக்களிப்பதாக ஒருவரும் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை.

மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com