TN Election 2026 | பூந்தமல்லியில் மக்கள் செல்வாக்கு யாருக்கு?

தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
TN Election 2026 | பூந்தமல்லியில் மக்கள் செல்வாக்கு யாருக்கு?
Published on

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய செனனையை அடுத்த பூந்தமல்லியில் vox pops நடத்தினோம். 34 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக, அதிமுக என மாறிமாறி கூறினர்.

திமுக-விற்கு வாக்களிக்க இருப்பதாக 14 பேரும், அதிமுக-வுக்கு வாக்களிக்க இருப்பதாக 14 பேரும் தெரிவித்தனர். இதனால் திமுக- அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க.-வுக்கு வாக்களிப்பதாக 6 பேர் தெரிவித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில்தான் நமக்கு தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com