TN Election 2026: கொளத்தூரில் முதல்வர்தான்..!

TN Election 2026: கொளத்தூரில் முதல்வர்தான்..!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
Published on

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள பகுதியில் vox pops நடத்தினோம். 42 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக 21 பேர் திமுக-வுக்கு வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக த.வெ.க-வுக்கு 19 பேர் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில்தான் நமக்கு தெரியவரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com