TN Election 2026 | மீனம்பாக்கத்தில் விசிலுக்கு ஆதரவு எப்படி இருக்கு?

தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது
TN Election 2026 | மீனம்பாக்கத்தில் விசிலுக்கு ஆதரவு எப்படி இருக்கு?
Published on

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய சென்னை மீனம்பாக்கத்தில் vox pops நடத்தினோம். 41 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக, அதிமுக என மாறிமாறி கூறினர்.

த.வெ.க.வுக்கு வாக்களிப்பதாக 24 பேர் தெரிவித்தனர். திமுக-விற்கு வாக்களிக்க இருப்பதாக 14 பேர் தெரிவித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில்தான் நமக்கு தெரியவரும்.

மீனம்பாக்கம் பகுதி பல்லாவரம் சட்டசபை தொகுதியின் கீழ் வருகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐ.ஜே.கே.வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com