ஊத்துக்குளி பேரூராட்சியில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குடிநீர் திட்டத்தின் வரைபடத்தை பார்வையிட்ட தமிழக செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
குடிநீர் திட்டத்தின் வரைபடத்தை பார்வையிட்ட தமிழக செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
Published on

ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஊத்துக்குளி பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் இந்த திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராசுக்குட்டி, ஊத்துக்குளி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com