வாரம் ஒரு திருமந்திரம்

மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
சிவபெருமான்
சிவபெருமான்
Published on

சைவ நெறி நூல்களுக்கு சமமாக விளங்கக்கூடிய தத்துவம் நிறைந்தது, திருமந்திரம் நூல். அன்பே அனைத்திற்கும் மூலம். அந்த அன்பாக இருப்பவர் சிவபெருமான் என்பதை தன்னுடைய திருமந்திரப் பாடல்கள் மூலமாக உணர்த்துகிறார், திருமூலர். மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத்

தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின்றேன் அறைஓர் சிவயோகத்தை

ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர் எழுத்தே.

விளக்கம்:-

இறைவன் திருவடியை நான் வழிபடுகின்றேன். அந்தப் பெருமானை புகழ்கின்றேன். அவன் அறிவுறுத்திய ஞானத்தால் தெளிவடைகின்றேன். சிவனின் திருவடியை சேர, அதற்குரிய பட்சாட்சரமான ஐந்தெழுத்து மந்திரத்தை கூறுகின்றேன். சக்கரத்தையும், சிவமந்திரத்தையும் சொல்கின்றேன். அந்த மந்திரத்தின் எழுத்தாகிய சிகரத்தைச் சிந்திக்கின்றேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com