இந்தியன் வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் இறுதிக்கு முன்னேறினார்.மெத்வதேவ் அமெரிக்க வீரர் டாமியை தோற்கடித்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ்  இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 1-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர், 7-6 (7-3), 6-2 என்ற செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதியில் மெத்வதேவ் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com