

ஹானர் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் 600 சீரிஸில் இடம்பெறுகிறது. இது ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி என அழைக்கப்படுகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி மாடல் 6.87 இன்ச் டிஸ்ப்ளே, 7700mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
புது ஸ்மார்ட்போன் குறித்து ஹானர் வெளியிட்டுள்ள டீசர்களின் படி புதிய 600 ஸ்மார்ட் 5ஜி மாடல் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக ஏஐ பட்டன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஏஐ சார்ந்த அம்சங்களை இயக்க முடியும். இந்த ஸ்மார்டபோனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது.
ஹானர் 600 ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த மேஜிக் ஓ.எஸ். 10 கொண்டிருக்கும் என்றும் இதில் 6.87 இன்ச் HD+ 1592x720 பிக்சல் LCD பேனல், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது.