ப்ளூடூத் காலிங் வசதியுடன் புதிய ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக்ரோபோன், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. 120 வொர்க் அவுட் மோட்கள், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ளது.
ப்ளூடூத் காலிங் வசதியுடன் புதிய ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
Published on

ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையல் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகம் செய்தது. ஃபயர் போல்ட் எடர்னோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. ஃபயர் போல்ட் எடர்னோ மாடலில் 1.99 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x283 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது.

முழு சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 120-க்கும் அதிக வொர்க்அவுட் மோட்கள், SpO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் மாணிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

ஃபயர் போல்ட் எடர்னோ அம்சங்கள்:

1.99 இன்ச் HD 240x283 பிக்சல் LCD ஸ்கிரீன்

ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி

குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்ஸ்

120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள்

ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்

ஹெல்த் மாணிட்டரிங்

IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட்

ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்

இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

இன்பில்ட் கேம்ஸ்

280 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் புளூ, பிளாக், பெய்க், சில்வர் கிரீன், பிளாக் சில்வர் மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com