

மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14ன் படி, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அதை பொதுமக்களிடம் இருந்து கட்டணத்துடன் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது.