புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்ட திருவிழா கூட்டு ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
Published on

மணிகண்டம் அருகே மேக்குடி ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

முன்னதாக புனித செபஸ்தியார் உள்ளிட்ட 3 சொரூபங்கள் பொருத்தப்பட்ட வண்ண மலர் தோரணங்கள், மின் விளக்குகளின் அலங்காரத்துடன் கூடிய 3 தேர்களை நாகமங்கலம் பங்குத்தந்தை ஜெயராஜ் அர்ச்சித்து வைத்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். தேர்கள் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, நேற்று அதிகாலை நிலையை அடைந்தது.

விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்ட திருவிழா கூட்டு ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இதில் மேக்குடி, ஆலம்பட்டி, மணிகண்டம், நாகமங்கலம், பாத்திமாநகர், ஆவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மணிகண்டம் போலீசார் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com