Wrestling | வினேஷ் போகத் போட்டிகளில் பங்கேற்க தடை

ஜூன் 26-ம் தேதி வரை எந்தவொரு உள்ளூர் போட்டியிலும் பங்கேற்க தகுதியற்றவர் என அறிவித்தது.
Wrestling | வினேஷ் போகத் போட்டிகளில் பங்கேற்க தடை
Published on

உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று முதல் 12-ம் தேதி வரை தேசிய ஓபன் ரேங்கிங் மல்யுத்த போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் களமிறங்க உள்ளதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்திருந்தார்.

தேசிய ரேங்கிங் போட்டியில் தன்னை பங்கேற்க விடாமல் தடுக்க மல்யுத்த சம்மேளம் சதி செய்வதாக சில தினங்களுக்கு முன் வினேஷ் போகத் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை மீறியதற்காக வினேஷ் போகத் ஜூன் 26-ம் தேதி வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒழுக்கமின்மை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து 14 நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்கும்படி வினேஷ் போகத்துக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், வரும் ஜூன் 26-ம் தேதி வரை எந்தவொரு உள்ளூர் போட்டியிலும் பங்கேற்க தகுதியற்றவர் எனவும் அறிவித்துள்ளது. இதனால் வினேஷ் போகத் மல்யுத்த களத்துக்கு திரும்புவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com