

ஒலிம்பிக்கில் இரண்டுமுறை தங்கப் பதக்கமும், இரண்டுமுறை உலக சாம்பியன் பட்டமும், மூன்றுமுறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டமும் வென்ற, தாமஸ் கோப்பை வெற்றியாளருமான டென்மார்க் நாட்டின் பிரபல பூப்பந்து வீரர் விக்டர் ஆக்செல்சன், 16 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு, தொழில்முறைப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
தீவிர முதுகு வலி மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் தான் இந்த கடினமான முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த முடிவை எடுப்பது கடினமாகவும், நேர்மையற்றதாகவும் தோன்றியது. மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவதற்கும், பயிற்சி பெறுவதற்கும் மற்றும் பல முக்கியமான தொடர்களில் வெற்றி பெறுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை ஒரு மிகப்பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன்.
நான் அனுபவித்தவற்றையும், நான் சந்தித்த அற்புதமான மனிதர்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு மிகச் சிலருக்கே கிடைக்கிறது. அதனால்தான், எனது விளையாட்டு வாழ்க்கையை நான் மகிழ்ச்சியுடன் திரும்பிப் பார்க்கிறேன்." என ஓய்வு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.