புரோ கபடி லீக்: யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.யு மும்பா அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது.
புரோ கபடி லீக்: யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி
Published on

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று வரை ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் இன்று உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் உ.பி. யோதாஸ்-யு மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 39-23 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது அரியானா ஸ்டீலர்ஸ் அணி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com