திலக் வர்மா சதம்... 200 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை... குஜராத் வெற்றித் தொடருமா?

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 199 ரன்கள் குவித்துள்ளது.
திலக் வர்மா சதம்... 200 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை... குஜராத் வெற்றித் தொடருமா?
Published on

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 30 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 199 ரன்கள் எடுத்தது. குஜராத்தின் பந்துவீச்சால் ஆரம்பத்தில் ரன்கள் குவிக்காவிட்டாலும், திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்த ரன்களை எட்டியது.

திலக் வர்மாவும் இப்போட்டியில் சதம் விளாசினார். நமன் தீர் 45 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளும், சிராஜ், பிரஷித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து 200 ரன்களை இலக்காக கொண்டு குஜராத் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com