

தாமஸ் கோப்பை பைனல்ஸ் (Thomas Cup Finals) பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்தியா- சீன தைபே அணிகள் மோதின.
முதல் லக்சயா சென் 18-21, 22-20, 21-17 என சோயுவை வீழ்த்தினார்.
2-வது போட்டிில் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபேயின் சியூ சியாங் சியே- வாங் சி-லின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 23-21, 19-21, 21-12 என வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
3-வது போட்டியில் 20 வயதான இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 8-ம் வரிசை வீரரான லின் சுன்-யியை 21-16, 21-17 என எளிதாக வீழ்த்தினார். இதனால் இந்தியா 3-0 என எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா அரையிறுதியில் பிரான்ஸ் அல்லது ஜப்பானை எதிர்கொள்ளும். 2022-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.