

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் உள்ள ஹோர்சென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த சீனா, இந்தியா (ஏ பிரிவு), ஜப்பான், மலே சியா (பி), சீன தைபே, டென்மார்க் (சி), தாய்லாந்து, பிரான்ஸ் (டி) ஆகிய அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. 14 முறை சாம்பியனான இந்தோனேசியா தனது பிரிவில் 3-வது இடம் பெற்று கால்இறுதி வாய்ப்பை இழந்தது.
இன்று கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு ஆட்டத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, சீன தைபேயுடன் மோதுகிறது.
இந்திய அணி லீக் ஆட்டங்களில் கனடா, ஆஸ்திரேலியா அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சீனாவிடம் போராடி வீழ்ந்தது. சீன தைபே அணி, சுவீடன், டென்மார்க் அணிகளை வென்றது.
தென்கொரியாவி டம் பணிந்தது. இவ்விரு அணியிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சீனா-மலேசியா, தாய்லாந்து-டென்மார்க், பிரான்ஸ்-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.