Wimbledon Tennis: 4வது சுற்றுக்கு முன்னேறினர் ஸ்வரேவ், டெய்லர் பிரிட்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
zverev
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.

இதில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் கைரன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 4-வது சுற்றில் ஸ்வரேவ், செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார். இதில் டெய்லர் பிரிட்ஸ் 4-6 என முதல் செட்டை இழந்தார்.

இதில் சுதாரித்துக் கொண்ட பிரிட்ஸ் அதிரடியாக ஆடி அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 7-6(7-5) என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், பல்கேரியாவின் டிமித்ரோவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோரும் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com