Italy Open டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 3 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 3 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 3 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லூசியானோ டர்டேரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் சுற்றை 6-1 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட லூசியானோ 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் கடும் போராட்டத்துக்குப் பின் லூசியானோ 7-6 (12-10) என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லூசியானோ 6-0 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நம்பர் 3 வீரரான அலெக்சாண்டரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com