Wimbledon Tennis: 3வது சுற்றுக்கு முன்னேறினர் ஸ்வரேவ், கச்சனாவ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
zverev, khachanov
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் வேலண்டின் ராயர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-1, 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 3வது சுற்றில் ஸ்வரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் கைரன் உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரண் கச்சனாவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் யானிக் ஹான்மேனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com