இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.இந்தத் தொடரில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் இறுதிக்கு முன்னேறினார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
Published on

ரோம்:

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.

இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை போராடி வென்றார். இறுதியில் ஸ்வரேவ் 1-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ் சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com