

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை 6-4, 6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் 3வது செட்டை 7-5 என கைப்பற்றினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 4வது செட்டை6-2 என வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.