குரோசியா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று நடந்தது.இதில் யூகி பாம்ப்ரி-அல்பானோ ஜோடி தோல்வி அடைந்தது.
Yuki Bambri
Published on

ஜாக்ரெப்:

குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.

இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு-கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது.

முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என எளிதில் கைப்பற்றியது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி குரோசியா ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com