Geneva Open டென்னிஸ்: இறுதிப்போட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்தது.
Yuki Bhambri
யூகி பாம்ப்ரி
Published on

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி,

ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மேன்ஸ்-மொனாகோவின் ரோமைன் அர்னேடோ ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட எதிர் தரப்பு 2வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடிக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் 2வது செட்டை 7-6 (7-2) என எதிர் தரப்பு வென்றது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் டை பிரேக்கரில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-10 என தோல்வி அடைந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com