

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், தரநிலை பெறாத மியோமிர் கெக்மனோவிச்சை எதிர்கொண்டார்.
இதில் சின்னர் எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மியோமிர் கெக்மனோவிச் சின்னருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டை மியோமிர் கெக்மனோவிச் 6-4 என வீழ்த்தினார்.
ஆனால் 2-வது செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார். 3-வது செட் டைபிரோக்கர் வரை சென்றது. இதில் மியோமிர் கெக்மனோவிச் 7(8)-6(6) எனக் கைப்பற்றினார். 4-வது செட்டை கைப்பற்றினால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற முனைப்பில் மியோமிர் கெக்மனோவிச் விளையாடினார். ஆனால், சின்னர் இந்த செட்டை 6-2 எனக் கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் சின்னர் தனது அனுபவம் முழுவதையும் பயன்படுத்தினால். இதனால் 6-3 எனக் கைப்பற்றினார். இதன்மூலம் 5 செட்கள் வரை சென்ற போட்டியில் 4-6, 6-3, 6(6)-7(8), 6-2, 6-3 என சின்னர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
டிசிட்சிபாஸ் 6-1, 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் பெவற்றி பெற்றார். என். போர்ஜஸ் 6-3, 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஜே. பொன்சேகா 7(7)-6(4), 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். எஸ். ஆஃப்னர் 1-6, 6-2, 6-4, 6-3, 6-4 என வெற்றி பெற்றார். 21-ம் நிலை வீரரான டி. பால் 6-1, 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.