Italy Open டென்னிஸ்: ஸ்வியாடெக், ஆண்ட்ரீவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: ஸ்வியாடெக், ஆண்ட்ரீவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

சில முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-1, 6-7 (5-7), 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் குரொசியாவின் அண்டோனியா ருசிக்கை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com