Madrid Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர், கேமரூன் நூரி

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Madrid Open டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர், கேமரூன் நூரி
Published on

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், டென்மார்க்கின் எல்மர் மோலர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-3 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் தியாகோ அகஸ்டினை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com