

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான ஆண்ட்ரியா பெல்லிகிரினோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டினை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதியில் சின்னர், ரஷியாவின் ரூப்லெவுடனும், மெத்வதேவ் ஸ்பெயினின் மார்ட்டின் லாண்டலூஸ் உடன் மோதுகின்றனர்.