சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஜானிக் சின்னர் மீண்டும் முதலிடம்

மான்டிகார்லோ டென்னிசில் பட்டத்தை வென்றதால் சின்னர் ஏற்றம் கண்டுள்ளார்.
ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்
Published on

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் (13,350 புள்ளி) ஒரு இடம் முன்னேறி மீண்டும் 'நம்பர் 1' இடம் பிடித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மான்டிகார்லோ டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்றதால் இந்த உயர்வைக் கண்டுள்ளார்.

கடந்த 5 மாதமாக முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (13,240 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது இடத்திலும் உள்ளனர்.

கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் இரு இடங்கள் முன்னேறி 5வது இடத்தில் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com