Wimbledon Tennis: அரையிறுதிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீரர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
jannik sinner
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து காலிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்து வருகின்றன.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் ஜேன் லென்னார்டு ஸ்டிரப் உடன் மோதினார்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அதிரடியான சர்வீஸ்கள் மூலம் புள்ளிகளைச் சேர்த்தார்.

இறுதியில், ஜானிக் சின்னர் 7-5, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். சின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக விம்பிள்டன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஜேன் லென்னார்டு ஸ்ட்ரப் மூன்றாவது சுற்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com