

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடந்த போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் இரு செட்களை 7-5, 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக 3வது செட்டை 6-1 என பிரான்ஸ் வீரர் கைப்பற்றினார். அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 4வது செட்டை 7-6 (7-4) என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4வது சுற்றில் ஜோகோவிச், ரஷியாவின் ரோமன் சபியுலின் உடன் மோதுகிறார்.
மற்றொரு போட்டியில் நமர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேன்சன் புரூக்ஸ்பியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.