Miami Open Tennis | சின்னர், ஆர்தர் பில்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 4வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6-4, 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் மொனாக்கோவின் வேலண்டின் வெசரேட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com