மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் பெய்டன் ஸ்டீயர்ன்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் டாரியா ஸ்னைகூரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com