

ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பொடபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.