French Open டென்னிஸ்: சபலென்கா, நவோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
sabalenka, osaka
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் டரியா கசட்கினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-0, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 7-6 (7-5), 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் இவா ஜோவிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுநாள் நடைபெறும் நான்காவது சுற்றில் சபலென்கா, நவோமி ஒசாகா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com