

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா முதல் செட்டை 6-4 என வென்றார். சபலென்கா 2வது செட்டில் பின்தங்கி இருந்தார்.
அதிலிருந்து மீண்ட சபலென்கா போராடி 2வது செட்டை 7-6 (7-4) என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஜெசிகா பெகுலா 6-0 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.