Miami Open Tennis | அரையிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
சபலென்கா
சபலென்கா
Published on: 

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்று போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஹெய்லி பேப்டிஸ்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் நம்பர் 3 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ரிபாகினா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com