Berlin Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய நம்பர் 1 வீராங்கனை

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனில் நடந்து வருகிறது.
sabalenka
Published on

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பர்டுன்கோவா முதல் செட்டை 6-2 என வென்றார். சபலென்கா 2வது செட்டில் 3-1 என பின்தங்கி இருந்தார்.

அப்போது சுதாரித்துக் கொண்ட சபலென்கா போராடி 2வது செட்டை 7-6 (7-2) என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவைச் சந்திக்க உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com