French Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
French Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com