

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசின் அரினா சபலென்கா, பிரான்சின் எலிசா ஜேக்யுமோட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மூன்றாவது சுற்றில் சபலென்கா ஆஸ்திரேலியாவின் டரியா கசட்கினாவுடனும், கோகோ காப், ஆஸ்திரியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதுகிறார்.