கனடா ஓபன் டென்னிஸ் - அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ரிபாகினா

கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
கனடா ஓபன் டென்னிஸ் - அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ரிபாகினா
Published on

மாண்ட்ரியல்:

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் தரவரிசையில் 3-ம் இடத்திலுள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார்.

இதில் சாம்சனோவா 1-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சாம்சனோவா, ஜெசிக்கா பெகுலாவுடன் மோதவுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com