பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி
Published on

பாரிஸ்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 4வது சுற்று முடிந்து காலிறுதிப் போட்டிகள் இன்று நடந்தன.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினியுடன் மோதினார்.

இதில் ரிபாகினா முதல் செட்டை 1-6 என இழந்தார். அடுத்த செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரிபாகினா 4-6 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ரிபாகினாவை வீழ்த்தி இத்தாலி வீராங்கனை பாவ்லினி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com