சின்சினாட்டி ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய ரிபாகினா, இகா ஸ்வியாடெக்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய ரிபாகினா, இகா ஸ்வியாடெக்
Published on

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீராங்கனையை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com