French Open டென்னிஸ்: ரிபாகினா, ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
French Open டென்னிஸ்: ரிபாகினா, ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், ஆஸ்திரேலியாவின் எமர்சென் ஜோன்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் வெரோனிகா எர்ஜவேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com