பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்:  சபலென்கா அதிர்ச்சி தோல்வி
Published on

ரியாத்:

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.

இதில் ரிபாகினா 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை 6-3 என சபலென்கா வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை6-1 என வென்றார்.

மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை 6-1, 6-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com