Wimbledon Tennis: முதல் சுற்றில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
rublev
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், சக நாட்டு வீரரான ரோமன் சபியுலின் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபியுலின் முதல் செட்டை 6-4 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடியாக ரூப்லெவ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (8-6), 6-3 என கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 4வது செட்டை சபியுலின் 6-3 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் போராடிய சபியுலின் 7-6 (14-12) என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

2வது சுற்றில் சபியுலின் நெதர்லாந்து வீரர் வான் டே ஜன்ஷல்ப் உடன் மோதவுள்ளார்.

இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள ஆண்ட்ரே ரூப்லெவ் 5 செட் வரை போராடி அதிர்ச்சி தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 11 வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 4-6, 2-6, 6-7 (7-9) என்ற செட் கணக்கில் போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்சிடம் தோல்வி அடைந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com