Italy Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஜெசிகா பெகுலா, ஆண்ட்ரீவா

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஜெசிகா பெகுலா, ஆண்ட்ரீவா
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஆஸ்திரியாவின் அனஸ்தசிய பொடபோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டனை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com