Italy Open டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, ஆண்ட்ரீவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, ஆண்ட்ரீவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சுவிட்சர்லாந்தின் ரிபேகா மசரோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-0, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-1, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் விக்டோரியா குலுபிக்கை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com