

பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரியாவின் டரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கசட்கினா 6-1, 7-5 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.